பாதுகாப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஜிசாட் 1 செயற்கைக்கோள் நாளை அதிகாலை விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 26 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து ஜிசாட் 1 செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது. ஜிஎஸ்எல்வி - எஃப் 10 ராக்கெட் இந்த செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது. பாதுகாப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய பகுதிகளை இடைவிடாது கண்காணிக்கும் அதிநவீன கேமரா இந்த செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளது.
இரவு, பகல் எந்த நேரமாக இருந்தாலும் கடும் மேக மூட்டமாக இருந்தாலும் மழைப் பொழிவின் போதும் துல்லியமான படத்தை எடுத்துத்தரும் ஆற்றல் இந்த கேமராவிற்கு உண்டு. இதன் காரணமாக பாகிஸ்தான், சீன எல்லைப் பகுதிகளில் அந்நாட்டு படைகளின் நகர்வுகளையும் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளையும் எளிதில் கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது.
நாளை அதிகாலை 5.43 மணிக்கு செயற்கைக்கோள் ஏவப்படும் நிலையில், 26 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை 3.43 மணிக்கு தொடங்கியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்