Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசிக்கு 15 நாள் சிறை: நீதிமன்றம் உத்தரவு

குழந்தை தாக்கிய தாய்க்கு 15 நாள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை வயது குழந்தையை, பெற்ற தாயே கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சில தினங்களுக்கு முன் பதைபதைப்பை ஏற்படுத்தியது. காண்போரை பதற வைத்த அந்தக் காட்சிகளின் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மோட்டூரைச் சேர்ந்த துளசி என்பவர்தான் அந்த குழந்தையை சித்திரவதை செய்தவர் என கண்டுபிடிக்கப்பட்டது.

image

துளசிக்கும் அவர் கணவர் வடிவழகனுக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் அவர் குழந்தையை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, சத்தியமங்கலம் காவல் துறையினர் துளசி மீது சிறார் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

துளசி மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்ததால், அவருக்கு மனநல பரிசோதனை நடத்துவதற்காக, அவரை விழுப்புரம் - முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு எவ்வித மனநல பாதிப்பும் இல்லையென உறுதிசெய்யப்பட்டது. இதனிடையே, மிஸ்டு காலில் அறிமுகமாகி துளசியுடன் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பேசி பழகி வந்ததாக ஆண் நண்பர் பிரேம்குமாரை கைது செய்ய, தனிப்படையினர் சென்னைக்கு நேற்று விரைந்தனர்.

தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தாய் துளசியை, 15 நாள் சிறையில் அடைக்க செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபது தினேஷ் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3BleTmA

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்