தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கும் கீழ் குறைந்து 99 ரூபாய் 47 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 27 நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் 102 ரூபாய் 49 காசாக விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில், பெட்ரோல் மீதான வரியில் 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 3 ரூபாய் 2 காசு குறைந்து 99 ரூபாய் 47 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம், டீசல் விலை 28-ஆவது நாளாக மாற்றமின்றி 94 ரூபாய் 39 காசுக்கு விற்பனையாகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்