Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஒரு கோடி சப்ஸ்கிரைபர் பெற்ற Village Cooking Channel: ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதி

YOU TUBE-ல் ஒரு கோடி SUBSCRIBERS-ஐ கடந்த முதல் தமிழ் சேனல் என்ற பெருமையைப் பெற்ற VILLAGE COOKING CHANNEL குழுவினர், கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இணையதள வசதிகள் உச்சகட்ட வளர்ச்சி கண்டுள்ள தொழில் நுட்ப உலகில் யூடியூப் சேனலின் பார்வையாளர்களாக மட்டுமே இருந்த பலரும் இன்று பல லட்ச ரூபாயை வருவாயாக ஈட்டும் உரிமையாளர்களாக மாறியுள்ளனர். அந்த வகையில் ரசிகர்களைக் கவர்ந்தது மட்டுமல்லாமல் ஒரு கோடி SUBSCRIBER-களைக் கடந்த முதல் தமிழ் யூடியூப் சேனல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 பேரைக் கொண்ட குழுவினரின் VILLAGE COOKING CHANNEL.

வருடத்தில் 6 மாதம் விவசாய தொழில் புரிந்து விட்டு மீதமுள்ள 6 மாதங்களில் கிடைத்த வேலைகளைச் செய்து வந்த இக்குழுவின் இளைஞர்கள் சோதனை முறையில் முதல் முறையாக 2018-ஆம் ஆண்டு யூடியூப் சேனலை தொடங்கி சமையல் செய்யும் வீடியோக்களை பதிவிடத் தொடங்கினர். பெரிய தம்பி என்னும் பெரியவரே இக்குழுவின் காட் ஃபாதர். சமையல் வீடியோக்களை பகிரும் பல்லாயிரக்கணக்கான சேனல்களுக்கு மத்தியில் கிராமத்து இளைஞர்களின் வெகுளியான பேச்சு, மண் மணம் மாறாத பாரம்பரிய சமையல் முறை, திறந்த வெளியில் பிரமாண்ட அளவில் சமையல் செய்வது உள்ளிட்டவற்றால் உலகளவில் ஒரு கோடி ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளனர். தமிழகத்திற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்தியே நேரில் சென்று இவர்களை வாழ்த்தும் அளவிற்கு பிரபலமடைந்தனர்.

image

இந்நிலையில் சேனல் தொடங்கிய மூன்றே ஆண்டுகளில் ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்களைக் கடந்து YOUTUBE நிறுவனத்தின் டைமண்ட் பட்டன் அங்கீகாரம் பெற்ற முதல் தமிழ் சேனல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது VILLAGE COOKING CHANNEL. அதாவது யூடியூப் சேனல்கள் ஒரு லட்சம் SUBSCRIBER எட்டும் போது சில்வர் பட்டன், 10 லட்சம் SUBSCRIBERகளை எட்டும்போது கோல்டன் ப்ளே பட்டன் மற்றும் ஒரு கோடி SUBSCRIBERகளை எட்டும் போது டைமண்ட் பட்டன் அங்கீகாரம் அளித்து யூடியூப் நிறுவனம் கவுரவிக்கும்.

தங்களின் பிரம்மாண்ட சமையல் மூலம் தயார் செய்த உணவுகளை காப்பகங்களுக்கு பகிர்ந்தளித்து வரும் இக்குழுவினர், யூடியூப் மூலம் பெற்ற வருவாயில் 10 லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளனர். இணைய வேகம் மிகவும் சுமாராகவே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த VILLAGE COOKING CHANNEL குழுவினர் இன்று தென்னிந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் இவர்களது மைல்கல் சாதனைக்கும் மனிதாபிமான உதவிக்கும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3hA3jf5

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்