கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கினால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என லிங்காயத்து மடத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
கர்நாடக முதலமைச்சராக உள்ள எடியூரப்பாவுக்கு 78 வயது ஆனதால், பதவியில் இருந்து விலக்க பாரதிய ஜனதா மேலிடம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கட்சிக்குள் இருப்பவர்களும் அவருக்கு அதிருப்தி தெரிவித்து வருவதால், எடியூரப்பாவுக்கு பதில், கர்நாடகாவில் புதிய முதலமைச்சர் நியமிக்கப்படலாம் என பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில், லிங்காயத்து, ஜெகத்குரு முருகராஜேந்திர மடம், ரம்பாபுரி பீடம் உள்ளிட்ட பல்வேறு மடங்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளன. முதலமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்கும் முடிவை மேற்கொண்டால் பாரதிய ஜனதா கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பல்வேறு மடங்களின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், 30-க்கும் மேற்பட்ட சாதுக்கள் எடியூரப்பாவை சந்தித்து தங்களது ஆதரவையும் தெரிவித்திருக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3rwnXS4கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கினால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என லிங்காயத்து மடத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
கர்நாடக முதலமைச்சராக உள்ள எடியூரப்பாவுக்கு 78 வயது ஆனதால், பதவியில் இருந்து விலக்க பாரதிய ஜனதா மேலிடம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கட்சிக்குள் இருப்பவர்களும் அவருக்கு அதிருப்தி தெரிவித்து வருவதால், எடியூரப்பாவுக்கு பதில், கர்நாடகாவில் புதிய முதலமைச்சர் நியமிக்கப்படலாம் என பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில், லிங்காயத்து, ஜெகத்குரு முருகராஜேந்திர மடம், ரம்பாபுரி பீடம் உள்ளிட்ட பல்வேறு மடங்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளன. முதலமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்கும் முடிவை மேற்கொண்டால் பாரதிய ஜனதா கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பல்வேறு மடங்களின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், 30-க்கும் மேற்பட்ட சாதுக்கள் எடியூரப்பாவை சந்தித்து தங்களது ஆதரவையும் தெரிவித்திருக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்