Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மதுரை எய்ம்ஸ்: புதிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன் - எம்.பி ரவீந்திரநாத்

https://ift.tt/2Wsk5WK

மதுரையில் எய்ம்ஸ் அமைவது குறித்து புதிதாக பதவியேற்றுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன் என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வருகை தந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை அமைவது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு....

எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து அதிகாரிகள், சுகாதாரத்துறை செயலாளர்கள் என சம்பந்தப்பட்டவர்களிடம் பேசினேன். இதுகுறித்து காணொலிக் காட்சி மூலமும் கூட்டம் நடைபெற்றது. மேலும் இதுகுறித்து புதிதாக பதவியேற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை டெல்லியில் அடுத்த வாரம் சந்தித்து பேச உள்ளேன்.

image

அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கைக்கு மதுரை, தேனி மற்றும் சிவகங்கை மருத்துவக் கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடப்பற்றாக்குறை உள்ள காரணத்தால் இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாணவர் சேர்க்கைக்கான இடத்தை ஆய்வு செய்து வருகிறார். இடத்தை தேர்வு செய்தவுடன் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றவரிடம் அதிமுக அமைச்சர்கள் மீதான வருமான வரி சோதனை நடவடிக்கை குறித்த கேள்விக்கு, தலைமை அறிவித்து விட்டது. தலைமை அறிவித்துள்ளது தான் முடிவு என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்