Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

விரைவு செய்திகள்: நாளை முதல் கூடுதல் தளர்வுகள் | பிரதமர்-தமிழக பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு

நாளை முதல் கூடுதல் தளர்வுகள் அமல்:
தமிழ்நாடு முழுவதும் கூடுதல் தளர்வுகள் நாளை காலை 6 மணி முதல் அமலுக்கு வருகின்றன.உணவகங்களில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர் அமர்ந்து உண்ணலாம், மாவட்டங்கள் இடையே தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
5 நாட்களுக்கு கனமழை:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் சென்னையில் லேசான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
எடியூரப்பா கடிதம் - துரைமுருகன் விளக்கம்:
மேகதாது அணை திட்டத்திற்கு ஒத்துழைப்பு கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் தொடர்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன், 'கர்நாடக அரசுக்கு உரிய பதில் தரப்படும்' என்றார்.
 
பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற தமிழக பாஜக எம்.எல்.ஏக்கள்:
தமிழக பாஜக எம்.எல்.ஏக்கள் உடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி மாநில அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆளுநர் உரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை ஆலோசித்துள்ளார்.
 
மதுரை அறக்கட்டளை நிறுவனர் கைது:
மதுரையில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவுக்கு தப்பிக்க முயன்ற நிலையில் தேனி மாவட்ட எல்லையில் 2 பேரும் பிடிபட்டனர்.
 
பழனி கோயில்:
நாளை முதல் கோயில் திறக்கப்படும் நிலையில் முன்பதிவு செய்து அனுமதி சீட்டு பெறும் பக்தர்களுக்கு மட்டுமே பழனி கோயிலில் அனுமதி வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
மணிகண்டனிடம் மதுரையில் விசாரணை:
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரை அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மீண்டும் வெடிக்கிறது ரஃபேல் சர்ச்சை:
ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடுகளை பிரான்ஸ் வலைத்தளம் அம்பலப்படுத்தியதன் எதிரொலியாக, இந்தியாவிலும் விசாரிக்கும் நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
 
புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்பு:
உத்தராகண்ட் மாநிலத்தில் முதல்வராகிறார் புஷ்கர் சிங் தாமி. தலைநகர் டேராடூனில் இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
 
யூரோ கோப்பை அரையிறுதி:
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து, டென்மார்க் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. காலிறுதியில் செக் குடியரசு மற்றும் உக்ரைன் அணிகள் ஏமாற்றம்.
 
முதல்வர் வலியுறுத்தல்:
நியாய விலைக் கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 
திமுகவில் ஐக்கியம்:
அமமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த பழனியப்பன், அவரது முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
 
கோவை மாணவர் மனு:
பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்: மேகதாதுவில் அணைகட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு கர்நாடக முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
 
மீண்டும் ரயில் சேவை:
மதுரையில் இருந்து சண்டிகர் வரையிலான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை - சண்டிகர் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலானது, ஜூலை 11 ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் என்றும் மறுமார்க்கத்தில் இருந்து ஜூலை 16 முதல் இயக்கப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள்:
ஆவின் பால் விலை குறைக்கப்பட்ட முதல் 50 நாட்களில் கூடுதலாக 5 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாக ஆவின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
 
இலங்கையிலும் வேகமாக பரவும் டெல்டா பிளஸ்:
இலங்கையிலும் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் கொழும்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
ஜப்பானில் கனமழையால் மண்சரிவு:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு மேற்கே அமைந்துள்ள அடாமியில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிக்கொண்ட 19 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
 
தீ விபத்து:
ஈரோட்டில் நூல் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
 
நாராயணசாமி குற்றச்சாட்டு:
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் பாஜகவிற்கு அக்கறை இல்லை என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3AqUb5i

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்