மேகதாதுவில் அணை கட்டுவதற்கு புதுச்சேரி அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கு, தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்ததை தொடர்ந்து, தற்போது புதுச்சேரி அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அணை கட்டுவதை தடுக்கக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுத, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேகதாதுவில் அணை கட்டினால் காரைக்கால் பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவர் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. காரைக்கால் பகுதிக்கு காவிரியிலிருந்து 7 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் இந்த கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு நேற்று முன்தினம் (ஜூலை 12), மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதுதொடர்பாக டெல்லி சென்று ஒன்றிய அரசை நேரில் வலியுறுத்த முடிவும் செய்யப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்