அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவின் தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆறுமுகப்பாண்டியன் தலைமையில் அதிமுகவின் மாவட்ட, ஒன்றிய, கிளைப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட அதிமுகவின் அனைத்து பிரிவுகளின் நிர்வாகிகள், அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ரூபம்.கே.வேலவன், அமமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அதிமுகவை வழிநடத்த சசிகலா பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்றும், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்களை அதிமுகவிலிருந்து நீக்கியதற்குக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3AYgG1I

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்