Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

அஜித்தின் 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக்: எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? ஏமாற்றம் தந்ததா?- அலசல்

https://ift.tt/3e94amc

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ளது. அந்த மோஷன் போஸ்டர் உருவான விதம் இப்படித்தான்... 

அஜித் - ஹெச்.வினோத் - போனிகபூர் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கான பூஜை 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதன் பின் அதே ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கினர்.

தலைப்பை அறிவித்த படக்குழு முதல் பார்வையை வெளியிடவில்லை. இருந்தாலும் 2020 ஆண்டு மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாளன்று முதல் பார்வை வெளியாகும் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஊரடங்கு காரணமாக அப்போது வெளியாகவில்லை. இருந்தாலும் கடந்தாண்டு ஏதோ ஒரு தேதியில் முதல் பார்வை அல்லது புகைப்படமானது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

அதேபோல் 2021-ஆம் ஆண்டு அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என்று காத்திருந்தனர். இந்த வருடமும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கிடையில் பல்வேறு பிரபலங்களிடமும் விளையாட்டுப் போட்டிகளிலும் அப்டேட் கேட்டு வந்தனர் அஜித் ரசிகர்கள். இந்த நிலையில் தற்போது வலிமை திரைப்படத்தின் மோசன் போஸ்டரை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

இந்த முதல் பார்வை வெளியீடு குறித்து ஆரம்பத்தில் போனி கபூர் பல திட்டங்களை வைத்திருந்தார். குறிப்பாக, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்த ஹெல்மெட், ரேஸிங் ஜாக்கெட் உள்ளிட்டவைகளை ஒவ்வொரு நாளும் வெளியிட்டு, இறுதியாக மோஷன் போஸ்டரை வெளியிட திட்டமிட்டிருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் ஏற்பட்டதால் நேரடியாக மோஷன் போஸ்டரை மட்டும் வெளியிட்டுக் கொள்ளலாம் என்று அஜித் சில மாதங்களுக்கு முன்பு கூறிவிட்டார். இந்த நிலையில் கடந்த வியாழன் அன்று சென்னை வந்த போனிகபூர் அஜித்தை சந்தித்து பேசி 11-ம் தேதி முதல் பார்வை வெளியிடுவது என முடிவெடுத்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதல் பார்வை வெளியானதை ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடினாலும், இன்னொருபுறம் எதிர்பார்த்த அளவுக்கு முதல் பார்வை திருப்தியைக் கொடுக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

ஒரு திரைப்படத்தின் முதல் பார்வை உருவாக்குவதில் இயக்குநரின் பங்கு மிக முக்கியம். குறிப்பாக, முதல் பார்வையில் என்ன புகைப்படம் இடம்பெற வேண்டும், போஸ்டரில் கதை சார்ந்த விஷயங்கள் என்னென்ன இருக்க வேண்டும் என்பதை திட்டமிடுவார்கள். ஆனால் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பார்வை உள்ளிட்ட புரோமோஷன் விஷயங்களில் இயக்குநர் ஹெச்.வினோத் தலையிடவில்லை.

இந்த முதல் பார்வை முழுக்க முழுக்க போனி கபூரின் மேற்பார்வையில் உருவாகியுள்ளது. அதிலும் மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் மோஷன் போஸ்டரையும், படத்திற்கான முதல் பார்வை போஸ்டரையும் உருவாக்கியுள்ளனர்.

மும்பை நிறுவனம் உருவாக்கியதாலே இந்த போஸ்டர்கள் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு அப்பாற்பட்டு, ஹிந்தி திரைப்பட பாணியில் காட்சி அளிக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

முதல் பார்வை தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும் ஹெச்.வினோத் நிச்சயம் கதையின் வாயிலாக திருப்திப்படுத்துவார் என்று அஜித் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

-செந்தில் ராஜா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்