Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஸ்டீராய்டுகளை உட்கொள்பவர்கள் கவனத்துக்கு... - பக்கவிளைவுகளும் முன்னெச்சரிக்கையும்

உடலில் உருவாகும் வீக்கம் போன்ற பிரச்னைகளை எதிர்க்க இயற்கையாக மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களைப் போன்றே, வீக்கங்களை குறைக்க மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒருவித ரசாயனம்தான் ஸ்டீராய்டுகள். இதில் சில உடலுக்கு உள்ளேயும், சில வெளியேயும் பயன்படுத்தப்படுகின்றன.

சருமத்தின்மீது ஸ்டீராய்டுகளை அதிகளவில் பயன்படுத்தும்போது அது பல்வேறு விதமாக பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதேபோன்றுதான் உள்ளே எடுக்கப்படும் ஸ்டீராய்டுகளும். இதுதொடர்பாக மருத்துவ நிபுணர்கள் பகிரும் வழிகாட்டுத் தகவல்கள்:

உள்ளே எடுக்கும் ஸ்டீராய்டுகளை பொதுவாக கார்டிகோஸ்டீராய்டுகள் (Corticosteroids) என்று அழைக்கின்றனர். இவை அனபாலிக் ஸ்டீராய்டுகளில் (Anabolic Steroids) இருந்து சற்று மாறுபட்டவை. அனபாலிக் ஸ்டீராய்டுகள் பாடி பில்டர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

கார்டிகோஸ்டீராய்டுகளை மூட்டு தேய்மானத்தால் ஏற்படும் வீக்கம் போன்ற குறிப்பிட்ட சில உடற்பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பர். அதுவே அதிகளவில் எடுத்துக்கொள்ளப்படும்போது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுத்துவிடும்.

உள்ளே எடுத்துக்கொள்ளப்படும் ஸ்டீராய்டுகள் வாய் வழியாகவோ, ஊசிகள் மூலமாகவோ அல்லது கண்கள் வழியாகவோ எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

வாய்வழியாக மாத்திரைகளாகவோ, திரவங்களாகவோ எடுத்துக்கொள்ளப்படும் ஸ்டீராய்டுகள் உடல் மொத்தமும் செயல்படும். இதுவே குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஏற்படும் வீக்கத்திற்கு ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்தினால் அதை ஊசி வழியாக செலுத்துவர். கண்களில் ஏற்படும் வீக்கங்களுக்கு ஐ ட்ராப்ஸ் அல்லது களிம்பு வடிவில் கொடுக்கப்படும்.

image

சருமத்தின்மீது எடுக்கப்படும் ஸ்டீராய்டுகளைப் போன்றுதான் உடலுக்கு உள்ளே எடுக்கப்படும் ஸ்டீராய்டுகளும் மிகக் குறுகிய நாட்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படும். நீண்ட நாட்கள் குறிப்பிட்ட அளவுக்குமேல் பயன்படுத்தும்போது அது சிறுநீரகக் கோளாறு, அல்சர் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

ஸ்டீராய்டுகளும், பக்கவிளைவுகளும்:

  • உடல் எடை அதிகரிப்பு மற்றும் அதிக பசி
  • வயிறு வலி, ஜீரணக் கோளாறு மற்றும் நெஞ்சு எரிச்சல்
  • தூக்கமின்மை
  • மனநிலை மாற்றம்
  • எளிதில் காயம் ஏற்படுதல்
  • சரும தடிமன் குறைதல்
  • உடலில் வரிகள் (stretch marks)
  • கண் எரிச்சல்

ஐ ட்ராப்ஸ் போன்று கண்கள் வழியாக எடுக்கப்படும் ஸ்டீராய்டுகள் அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது என்றாலும், அதிக நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தும்போது அது ரத்தத்தில் கலந்துவிடும். இது ஸ்டீராய்டு மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் போன்றே மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

டயாபட்டிக் நோயாளிகள் ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொள்ளும்போது உயர் ரத்த அழுத்தம் அல்லது கை, கால் வலிப்பிற்கு வழிவகுக்கும். எனவே, ஸ்டீராய்டு எடுத்துக்கொள்ளும்போது அடிக்கடி ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது அவசியம். சில நேரங்களில் டயாபட்டிக் வர ஸ்டீராய்டுகள் காரணமாக அமையும்.

image

சிலநேரங்களில் கண்புரை நோய் மற்றும் பார்வைதிறன் குறைய காரணமாகிவிடும். ஸ்டீராய்டு எடுத்துக்கொள்ளும்போது கண்பார்வையில் மாற்றங்கள் தென்பட்டால் உடனே மருத்துவரின் உதவியை நாடுவது சிறந்தது.

அதிக ஸ்டீராய்டுகளை உட்கொள்ளும்போது அது எலும்புகளை பலவீனமாக்கும். அது ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னைக்கு வழிவகுத்துவிடும். இதனால் மெலிதாக அடிபட்டால்கூட எலும்புகள் எளிதாக உடைந்துவிடும் அபாயம் உள்ளது. எனவேதான் ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்ளும்போது மருத்துவர்கள் கால்சியம், வைட்டமின் டி மாத்திரைகளையும் உடன் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கின்றனர். மேலும் அதனுடன் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் எலும்புகளை வலுவாக்கும். எனவே ஸ்டீராய்டு எடுத்துக்கொள்பவர்கள் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்ப்பது சிறந்தது.

யாரெல்லாம் ஸ்டீராய்டு எடுத்துக்கொள்ளக் கூடாது? 

ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள் தடுப்பூசிகளை தவிர்ப்பது சிறந்தது. தடுப்பூசி கட்டாயமெனில் மருத்துவரின் அறிவுரைப்படி எடுக்கவேண்டும். அதேபோல் அறுவை சிகிச்சை செய்பவர்கள், குழந்தைப்பேறு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஸ்டீராய்டுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளக் கூடாது.

தொடர்புடைய கட்டுரை > சருமத்துக்கான ஸ்டீராய்டு க்ரீம்களின் பக்கவிளைவுகள் மோசமானவை - ஒரு அலர்ட் பார்வை 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3xvnYrv

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்