மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அண்மையில் மத்திய அரசு, 1952-ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் சில முக்கிய திருத்தங்களைக் கொண்டுவந்து, ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021 வெளியிடப்பட்டது. இந்த மசோதாவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துவருகின்றனர்.
இந்நிலையில், மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் உள்ளதால், இந்த திருத்த மசோதாவை திரும்பப் பெறுமாறும், இதுதொடர்பாக முயற்சிகளை கைவிடுமாறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய தகவல் ஒளிப்பரப்பு துறை அமைச்சர் ரவிசங்கருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். மேலும் இந்த வரைவு மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3jJs9f9மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அண்மையில் மத்திய அரசு, 1952-ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் சில முக்கிய திருத்தங்களைக் கொண்டுவந்து, ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021 வெளியிடப்பட்டது. இந்த மசோதாவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துவருகின்றனர்.
இந்நிலையில், மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் உள்ளதால், இந்த திருத்த மசோதாவை திரும்பப் பெறுமாறும், இதுதொடர்பாக முயற்சிகளை கைவிடுமாறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய தகவல் ஒளிப்பரப்பு துறை அமைச்சர் ரவிசங்கருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். மேலும் இந்த வரைவு மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்