Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

“டேனிஷ் சித்திக்கை தாலிபன்கள் துன்புறுத்தி கொன்றார்கள்” - அமெரிக்க பத்திரிக்கை புதிய தகவல்

https://ift.tt/2WFGgsJ

இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக்கை, தாலிபன்கள் கொடூரமான முறைகளில் துன்புறுத்தி சுட்டுக் கொன்றுள்ளதாக அமெரிக்க பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
புலிட்சர் விருது வென்ற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியப் புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக்கி, கடந்த 16-ம் தேதி ஆப்கானிஸ்தான் படையினருக்கும் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற போரைப் படம் பிடித்துக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். அவரின் மறைவுச் செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
 
image
முன்னதாக, டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்டது குறித்து பேட்டியளித்த தாலிபன் செய்தித் தொடர்பாளர், ''டேனிஷ் சித்திக்கி யாருடைய தாக்குதலின்போது துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் எப்படி இறந்தார் என்பதும் எங்களுக்குத் தெரியாது. எங்களை மன்னித்து விடுங்கள்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் டேனிஷ் சித்திக்கி எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
 
அமெரிக்காவைச் சேர்ந்த 'வாஷிங்டன் எக்ஸாமினர்' செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ''ஸ்பின் போல்டாக் பகுதியில் டேனிஷ் சித்திக்கி ராணுவத்தினருடன் சென்று கொண்டிருந்த போது, தாலிபன்கள் தாக்கியதால் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் அங்குள்ள மசூதி ஒன்றில் தஞ்சம் புகுந்தார். டேனிஷ் சித்திக்கி அங்கு இருப்பதை அறிந்த தாலிபன்கள் அவருடைய அடையாள அட்டையைப் பரிசோதித்துள்ளனர். பின்னர் அந்த மசூதி மீது தாக்குதல் தொடுத்து டேனிஷ் சித்திக்கை பிடித்து கொடூரமான முறைகளில் துன்புறுத்தி சுட்டுக் கொன்றனர். அவரைக் காப்பாற்ற முயன்ற ஆப்கான் தளபதியும் அவரது அணியினரும் தாலிபன்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்'' என்று செய்தி வெளியாகியுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்