இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகிருந்த நிலையில் இந்தியா உடனான கிரிக்கெட் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் மற்றும் உதவி ஊழியர் ஜி.டி.நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்கள். இதையடுத்து கொழும்பில் வருகிற 13-ம் தேதி தொடங்க இருந்த இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் 4 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட அட்டவணையின்படி முதலாவது ஒரு நாள் போட்டி 17-ம் தேதி நடக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி 19-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 21-ந் தேதியும் நடைபெறுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் முறையே 24, 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3k1sdHtஇலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகிருந்த நிலையில் இந்தியா உடனான கிரிக்கெட் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் மற்றும் உதவி ஊழியர் ஜி.டி.நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்கள். இதையடுத்து கொழும்பில் வருகிற 13-ம் தேதி தொடங்க இருந்த இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் 4 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட அட்டவணையின்படி முதலாவது ஒரு நாள் போட்டி 17-ம் தேதி நடக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி 19-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 21-ந் தேதியும் நடைபெறுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் முறையே 24, 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்