Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

"சாதியப் பாகுபாடு: சென்னை ஐஐடியில் இருந்து விலகுகிறேன்" - உதவி பேராசிரியர் மின்னஞ்சல்

https://ift.tt/2ToRYGA

சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு இருப்பதால் கல்லூரியில் இருந்து விலகுகிறேன் என்று உதவிப் பேராசிரியர் விபின் புடியதாத் வீட்டில் என்பவர் ஐஐடி நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடியில் பணியாற்றுவோர் எதிர்கொள்ளும் சாதிய பாகுபாடு குறித்து ஆராய, பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

image

2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணியில் சேர்ந்தது முதல் சாதிய ரீதியிலான பாகுபாட்டை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சென்னை ஐஐடி நிர்வாகத்திடம் கேட்ட போது, உதவிப் பேராசிரியர் விபின் புடியதாத் வீட்டில் மின்னஞ்சல் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என பதில் அளித்துள்ளது. கல்லூரி மாணவரோ, பேராசிரியரோ முறைப்படி புகார் அளித்தால் அதுகுறித்து விசாரிக்கப்படும் என ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டியில் கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுக்கூரத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்