பஞ்சாப் அரசியலில் காங்கிரஸ் தலைமை வலுக்கட்டாயமாக தலையீட்டு செய்து வருவதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸை தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்கு, முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத்சிங் சித்துவுக்கும், முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், இரு தலைவர்களையும் டில்லிக்கு அழைத்து காங்கிரஸ் தலைமை ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, சட்டப்பேரவை தேர்தலில் அமரீந்தர் சிங்கையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில், சித்து சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ராகுல், பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் ஆகியோரும் உடனிருந்தனர். சித்துவை காங்கிரஸ் தலைமை அடிக்கடி சந்தித்து பேசுவதால், முதல்வர் அமரீந்தர் சிங் அதிருப்தி அடைந்துள்ளார். இதனையடுத்து சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை அமரீந்தர் சிங் அனுப்பியதாக கூறப்படுகிறது.
அதில், "பஞ்சாப் மாநில விவகாரங்களில் காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டாம்" என கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் காங்கிரஸ் தலைமை பஞ்சாப் அரசியலில் பிளவு ஏற்படுத்த நினைப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் எனவும் அமரீந்தர் சிங் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3ktHFMvபஞ்சாப் அரசியலில் காங்கிரஸ் தலைமை வலுக்கட்டாயமாக தலையீட்டு செய்து வருவதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸை தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்கு, முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத்சிங் சித்துவுக்கும், முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், இரு தலைவர்களையும் டில்லிக்கு அழைத்து காங்கிரஸ் தலைமை ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, சட்டப்பேரவை தேர்தலில் அமரீந்தர் சிங்கையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில், சித்து சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ராகுல், பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் ஆகியோரும் உடனிருந்தனர். சித்துவை காங்கிரஸ் தலைமை அடிக்கடி சந்தித்து பேசுவதால், முதல்வர் அமரீந்தர் சிங் அதிருப்தி அடைந்துள்ளார். இதனையடுத்து சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை அமரீந்தர் சிங் அனுப்பியதாக கூறப்படுகிறது.
அதில், "பஞ்சாப் மாநில விவகாரங்களில் காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டாம்" என கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் காங்கிரஸ் தலைமை பஞ்சாப் அரசியலில் பிளவு ஏற்படுத்த நினைப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் எனவும் அமரீந்தர் சிங் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்