வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விலக்கு கோரிய நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சமூக நீதிக்காக போராடும் கதாநாயகனாக திரையில் காட்டிக் கொள்ளும் நடிகர் வரி செலுத்த மறுப்பது தவறான முன்னுதாரணமாகும் என்றும் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
- வெவ்வேறு கார்களை வாங்குவதில் ஆர்வம் கொண்ட நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு, 2012-ல் என்னென்ன வரிகளை செலுத்த வேண்டும், நுழைவு வரிக்கு எதிராக அவர் நீதிமன்றம் சென்றது ஏன்? என்று விரிவாக பார்க்கலாம்
புதுப்புது கார்களை வாங்கி பயன்படுத்துவதில் அலாதி பிரியம் கொண்டவர் நடிகர் விஜய். அதனால், மாருதி சுசூகி ஆல்டோ 800, ஸ்விப்ட், ஆடி ஏ8, மினிகூப்பர், பி.எம்.டபிள்யூ சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.ஏ என பல்வேறு கார்கள் அவரிடம் உள்ளன. அந்தவகையில்தான், 2012-ம் ஆண்டில் அதி சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸின் கோஸ்ட் மாடலை விஜய் வாங்கியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த காரின் அன்றைய விலை சுமார் 2.5 கோடி ரூபாய்.
இன்றைய ஜி.எஸ்.டி நடைமுறையில் இல்லாத நிலையில், அப்போதைய VAT-ம் இறக்குமதி கார்களுக்கு பொருந்தாது. அதனால், 137 விழுக்காடு இறக்குமதி வரி செலுத்த வேண்டும். அதோடு, சாலை வரி, ரிஜிஸ்ட்ரேஷன், செஸ், காப்பீடு ஆகியவையும் உண்டு. இவற்றை எல்லாம் சேர்த்தால் 2.5 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு காரின் விலை 6.5 கோடி ரூபாய் ஆக மாறும். இவை போக, மாநிலங்களுக்கு இடையில் காரை மாற்றி பதிவு செய்ய நுழைவு வரியை தனியாக செலுத்த வேண்டும். மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் இந்த வரி சுமார் 20 விழுக்காடு என்பதால், சொகுசு கார்கள் வாங்கும் பலரும் நுழைவு வரிக்கு எதிராக நீதிமன்றம் செல்வது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. அதன்பிறகு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள ஆவணங்களை வைத்து, குறைந்தபட்ச நுழைவு வரியை செலுத்தி கார்களை பதிவு செய்ய முடியும். அதன் காரணமாகவே, விஜய் உள்ளிட்ட பலரும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதன்பிறகு தங்கள் கார்களை பதிவு செய்து பயன்படுத்தி வருகின்றனர் என சொல்லப்படுகிறது.
இந்நிலையிலே, 2012ல் விஜய் தாக்கல் மனுவை விசாரித்து சொகுசு கார் வாங்குபவர்கள் வரிவிலக்கு கோருவதும், வரி ஏய்ப்பு செய்ய முனைவதும் தேச விரோதம் என தெரிவித்துள்ள நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
இதுகுறித்து புதியதலைமுறையின் 360 டிகிரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திரை விமர்சகர் பிஸ்மி, “இந்த விவகாரம் என்று இல்லை, பொதுவாக திரை நட்சத்திரங்களுக்கு பிடிக்காத கசப்பான வார்த்தை வரி என்பதுதான். நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும், அதற்கு கட்டவேண்டிய வரியை குறைக்க வேண்டும் என்பதற்காக குறைவான தொகையை மட்டும் கணக்கில் வரும் பணமாக வாங்கிக்கொண்டு, மீதமுள்ள தொகையை கருப்புப்பணமாக வாங்குகின்றனர் என்ற குற்றசாட்டு நீண்டகாலமாகவே உண்டு. ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகும் கூட நடிகர்கள், தாங்கள் அந்த ஜிஎஸ்டியை கட்டாமல் தயாரிப்பாளர்கள் தலையில்தான் கட்டினார்கள். இதன் தொடர்ச்சியாகவே சொகுசு கார்களுக்கும் வரிவிலக்கு கேட்கிறார்கள்.
வெளிநாட்டில் வாங்கும் புதிய கார்களைக்கூட பழைய கார்கள் என பொய்யான ஆவணங்களை தயார் செய்து அதன் மூலமாக பல இலட்ச ரூபாய் வரி ஏய்ப்பும் செய்கிறார்கள். இதுபோல வாங்கும் சொகுசு கார்களை பாண்டிச்சேரியில் பதிவுசெய்தால் வரி குறைவு என்பதால், பாண்டிச்சேரியில் வசிப்பதுபோல பல நடிகர், நடிகைகள் பொய்யான ஆவணங்கள் தயார் செய்து கார் வாங்கியதும் கடந்த காலங்களில் நடந்துள்ளது, இதுபோலவே விஜய்யும் வரிவிலக்கு கேட்டுள்ளார். ஒரு சொகுசு காரை வெளிநாட்டில் வாங்கும்போதே அதற்கான வரி என்ன என்பது அனைவருக்கும் தெரியும், அதன்பின்னர் வரிவிலக்கு கேட்பது சரியான விஷயமல்ல. விஜய் போன்ற கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர் இப்படி நீதிமன்றத்துக்கு சென்று வரிவிலக்கு கேட்பது அவரின் இமேஜை பாதித்திருக்கிறது.
சச்சின் டெண்டுல்கருக்கு ஏற்கனவே இதுபோல வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது, சச்சின் இந்தியாவுக்காக உலக அரங்கில் புகழ் தேடி தந்த விளையாட்டு வீரர். விஜய் ஒரு நடிகர், இருவரையும் ஒப்பிடுவதே தவறு. விஜய் பல சொகுசு கார்களை வைத்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது, ஆனால் அவரின் ரசிகராக உள்ள ஒருவேளை உணவுக்கே சிரமப்படும் வறுமையில் நபர்கள் விஜய்யின் இந்த செயலுக்கு முட்டுக்கொடுத்து பூசி மொழுகுவதுதான் வேதனையான விஷயம், அவர்கள் பக்த மனநிலையில் உள்ளனர்” என தெரிவித்தார்
இது தொடர்பாக பேசிய பொருளாதார ஆலோசகர் கோபால கிருஷ்ணன், “ திரைத்துறையிலேயே இந்திய அளவில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் வாங்கும் சம்பளத்துக்கு முறையாக வரிகட்டுகிறார்கள். இது போன்ற நடிகர்கள் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளை உதாரணமாக படங்களில் காட்டுவார்கள், ஆனால் தங்கள் பணத்திற்கு வரி கட்டாமல் எப்படி தப்பிப்பது என்றுதான் பார்க்கிறார்கள், இவை அனைத்துமே தவறான முன்னுதாரணம். பாண்டிச்சேரியில் பலர் தங்கள் சொகுசு கார்களை பதிவு செய்து வரி விலக்கு செய்யும் முறைகேடுகளும் பல நடக்கிறது, தமிழ்நாடு அரசு இதனை முறையாக தணிக்கை செய்தால் பல முறைகேடுகளை கண்டுபிடிக்கலாம். அரசின் தரப்பிலும் இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க சட்டத்தை வலுப்படுத்த வேண்டும், அப்போதுதான் தவறுகள் குறையும். 2012 ஆம் வாங்கிய காருக்கான வழக்கு 9 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டிருக்கிறது, இதற்கு சட்டத்தில் உள்ள குறைபாடுகள் தான் காரணம்.
இவ்விவகாரம் தொடர்பாக மேலும் பேசிய பிஸ்மி, “ 2012இல் ‘நண்பன்’ படத்தில் விஜய் நடித்தபோது, அப்படத்தின் இயக்குநர் ஷங்கர் மற்றும் விஜய் இருவரும் இணைந்துதான் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கியுள்ளனர். ஆனால், ஷங்கர் தான் வாங்கிய காருக்கு முறையாக வரி கட்டிவிட்டார், விஜய்தான் இதுபோல வரிவிலக்கு கேட்டு நீதிமன்றம் சென்றார். இதில் விஜய் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என கனவில் இருப்பவர், இவர் போன்றவர்கள் முறையாக வரிகட்டி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். வரி என்பது மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக அரசு வாங்குவது, அதனை விஜய்யே முன்வந்து தானாகவே வரிகட்டியிருந்தால் அவருக்கு கெளரவமாக இருந்திருக்கும்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அனைத்து வரிகளுமே அதிகமாகவே உள்ளது. அதனை குறைக்கவேண்டும் என்பது நியாயம்தான். இதுபோல மக்களுக்கு சுமையாக உள்ள அனைத்து வரிகளையும் குறைக்கவேண்டும் என விஜய் நீதிமன்றம் சென்றிருந்தால் அவர் ரியல் ஹீரோவாக இருந்திருப்பார், ஆனால் தனது சுயநலத்துக்காக அவர் நீதிமன்றம் சென்றதுதான் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது” என தெரிவித்தார்
விஜய் மீதான வழக்கின் முழு விபரம்:
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததோடு, வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பதிவு செய்யவில்லை. இந்தநிலையில் காருக்கு உரிய நுழைவு வரி செலுத்தும்படி நடிகர் விஜய்க்கு வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்தும், வரிவிலக்கு கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், மனுதாரர் தான் ஒரு நடிகர் என்பதை கூட மனுவில் குறிப்பிடவில்லை, வழக்கறிஞரிடம் கேட்டபோது தான் நடிகர் என தெரிய வருகிறது என்று கூறினார். புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என கூறிய நீதிபதி, வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என தெரிவித்தார். வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை என காட்டமாக கூறிய நீதிபதி, மக்கள் செலுத்தக்கூடிய வரி தான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என சுட்டிக்காட்டினார். சமூகநீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், இதுபோல வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் , வரிஏய்ப்பு என்பது தேசத்துரோகம் என்றும் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கண்டிப்புடன் கூறினார்.
வரி விலக்கு கோரிய விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, காருக்கான வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் ஆணையிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்