Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

'இந்துஸ்தானி வழி...' - இந்திய ஒலிம்பிக் அணிக்காக ரஹ்மான் இசையில் பாடல்

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய அணியை உற்சாகப்படுத்துவதற்கான அதிகாரபூர்வ பாடலை காணொலி மூலம் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.

'இந்துஸ்தானி வழி' என்று தலைப்பிடப்பட்ட இந்தப் பாடலுக்கு புகழ்பெற்ற இந்திய இசைக் கலைஞரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, இளம் பாடகி அனன்யா பிர்லா பாடியுள்ளார். கடினமான சூழலிலும் ஒன்றிணைந்து இந்தப் பாடலை உருவாக்கிய கலைஞர்களை அனுராக் தாக்கூர் பாராட்டினார்.

"ஏ.ஆர்.ரஹ்மான், அனன்யா பிர்லா ஆகியோருக்கு இந்த முயற்சிக்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிணைந்து பணிபுரிவதற்கு கடினமான இந்த கொரோனா காலக்கட்டத்தில், உணர்ச்சி ததும்பும் இந்தப் பாடலை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியாவுக்காகவும் இந்திய அணிக்கு உற்சாகம் அளிப்பதற்காகவும் அவர்கள் இதைச் செய்துள்ளனர். இந்தப் பாடலை எந்த அளவு முடியுமோ அந்தளவு பகிருமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தாக்கூர் கூறினார்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணை அமைச்சர் நிசித் பிரமானிக், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரீந்தர் பத்ரா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைமை செயலாளர் ராஜீவ் மேத்தா, இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் சந்தீப் பிரதான் மற்றும் டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் தலைமை செயல் அதிகாரி கமாண்டர் ராஜகோபாலன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

டோக்கியோவிற்கு செல்லும் வீரர்களுக்கு நம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் உற்சாகம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அறைகூவலை வலுப்படுத்துவதற்கான மற்றுமொரு முயற்சியாக இந்த பாடல் அமைந்துள்ளதாக நிசித் பிரமானிக் கூறினார்.

"டோக்கியோவிற்கு செல்லும் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்க #Cheer4India என்ற இணையப் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார். இதற்கு ஒட்டுமொத்த நாடும் முழு மனதுடன் ஆதரவளித்து வருகிறது. இந்த சிறப்பான பாடலுக்காக இசைமேதை ஏ.ஆர். ரஹ்மானுக்கும், இளம் கலைஞர் அனன்யா பிர்லாவுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

- கணபதி சுப்ரமணியம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3kiZUEm

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்