முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான மருந்துகளுக்கு வரிவிலக்குகோரி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உயிர்காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது சுங்கவரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட இதர வரிகளுக்கு விலக்கு தேவைப்படுவதாக முதல்வர் கூறியுள்ளார்.
வரிவிலக்கு அளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, உரிய அறிவுறுத்தல் தரவேண்டுமென முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னராக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முதுகுத்தண்டுவட நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு போதிய நிதி கிடைத்தும், ஜிஎஸ்டி போன்ற வரிகளால் மருந்து கிடைப்பதில் சிக்கல் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மித்ராவுக்கு நடப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், அவருக்கு முதுகுத் தண்டுவடம் சிதைவு நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இந்த நோயை குணப்படுத்துவதற்கான மருந்தின் விலை 16 கோடி ரூபாய் ஆகும். ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை சேர்த்து 22 கோடி ரூபாய் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு நண்பர்களின் உதவியுடன் 16 கோடி ரூபாயை மித்ராவின் பெற்றோர் திரட்டியுள்ளனர். இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து மருந்து இறக்குமதி செய்யப்படுவதால், அதற்கான இறக்குமதி வரி, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றிற்கு மேலும், 6 கோடி ரூபாய் தேவைப்பட்டது.
இந்த ‘வரி’களுக்கு விலக்கு அளித்து, மருந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என மித்ராவின் பெற்றோர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு நேற்றைய தினம் கடிதம் அனுப்பியுள்ளனர். மத்திய அரசு உடனடியாக உதவ முன் வர வேண்டும் என மித்ராவின் பெற்றோர் கோரிக்கையும் விடுத்தனர். இந்நிலையில்தான் இன்று முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்