இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீர்பத்ர சிங் இன்று அதிகாலை சிம்லாவில் உயிரிழந்தார்.
87 வயதான வீர்பத்ர சிங், இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் (ஐ.ஜி.எம்.சி) அதிகாலை 3.40 மணியளவில் உயிரிழந்தார். இவர் இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக ஜூன் 11 அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார்.
ஒன்பது முறை எம்.எல்.ஏவும், ஐந்து முறை எம்.பி.யாகவும் பணியாற்றிய வீர்பத்ர சிங், இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக ஆறு முறை பணியாற்றினார். 1983 முதல் 1990 வரை, 1993 முதல் 1998 வரை, 2003 முதல் 2007 வரை, 2012 முதல் 2017 வரை இமாச்சலின் முதல்வராக பணியாற்றினார். காங்கிரஸின் மூத்த தலைவரான இவர் 1962 இல் மக்களவையில் நுழைந்து 1967 மற்றும் 1971 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்றார். இவர் பலதுறைகளின் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர்.
சிம்லா மாவட்டத்திலுள்ள புஷாரின் அரச குடும்பத்தைச் சேர்ந்த வீர்பத்ர சிங்கிற்கு, மனைவி பிரதிபா சிங், மகன் விக்ரமாதித்யா சிங் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3homPwnஇமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீர்பத்ர சிங் இன்று அதிகாலை சிம்லாவில் உயிரிழந்தார்.
87 வயதான வீர்பத்ர சிங், இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் (ஐ.ஜி.எம்.சி) அதிகாலை 3.40 மணியளவில் உயிரிழந்தார். இவர் இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக ஜூன் 11 அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார்.
ஒன்பது முறை எம்.எல்.ஏவும், ஐந்து முறை எம்.பி.யாகவும் பணியாற்றிய வீர்பத்ர சிங், இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக ஆறு முறை பணியாற்றினார். 1983 முதல் 1990 வரை, 1993 முதல் 1998 வரை, 2003 முதல் 2007 வரை, 2012 முதல் 2017 வரை இமாச்சலின் முதல்வராக பணியாற்றினார். காங்கிரஸின் மூத்த தலைவரான இவர் 1962 இல் மக்களவையில் நுழைந்து 1967 மற்றும் 1971 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்றார். இவர் பலதுறைகளின் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர்.
சிம்லா மாவட்டத்திலுள்ள புஷாரின் அரச குடும்பத்தைச் சேர்ந்த வீர்பத்ர சிங்கிற்கு, மனைவி பிரதிபா சிங், மகன் விக்ரமாதித்யா சிங் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்