துபாயில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் கப்பல் பயங்கரமாக வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது.
உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான ஜெபெல் அலி துறைமுகத்தில் இருந்த அந்தக் கப்பலில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதையடுத்து, அது தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மிகப்பெரிய கோள வடிவில் விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்பு எரிய ஆரம்பித்தது. இதனால் துறைமுகத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துபாய் நகரின் வானுயர்ந்த கட்டடங்களில் சுவர்களும் ஜன்னல்களும் அதிர்ந்ததால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
கப்பல் தீப்பிடித்து எரிந்த துறைமுகம் அமெரிக்க போர்க்கப்பல்களும் நிறுத்தி வைக்கப்படும் இடமாகவும் உள்ளது. விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றபோதிலும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கப்பலில் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்