Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

அசாம் கால்நடை மசோதா: கோயில் இருந்தால் 5 கிமீ சுற்றளவு பகுதியில் மாட்டிறைச்சி விற்கத் தடை

அசாமில் தாக்கல் செய்யப்பட்ட புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா, 2021ன் படி இந்து, சமண, சீக்கிய மற்றும் பிற மாட்டிறைச்சி சாப்பிடாத சமூகங்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மாட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி பொருட்களை விற்பனை செய் தடைவிதிக்கப்படும். எந்தவொரு பகுதியிலும் 5 கி.மீ சுற்றளவுக்குள் கோயில் அல்லது வைணவ மடங்கள்  இருப்பின் அப்பகுதிகளில் மாட்டிறைச்சி விற்கவும் தடைவிதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

சாம் மாநில சட்டமன்றத்தில் திங்களன்று தாக்கல் செய்யப்பட்ட கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான புதிய மசோதாவை முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தாக்கல் செய்தார்.  

 இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அசாம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸை சேர்ந்த டெபப்ரதா சைகியா, “இந்த மசோதாவில் ஏராளமான சிக்கலான பகுதிகள் உள்ளன, அவை சட்ட வல்லுநர்களால் ஆராயப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மாட்டிறைச்சி கோயில் அமைந்துள்ள 5 கி.மீ சுற்றளவில் எங்கும் விற்கக்கூடாது என்கிறார்கள். ஒருவர் திடீரென ஒரு கோயிலை எங்கு வேண்டுமானாலும் கட்டலாம், எனவே து மிகவும் தெளிவற்ற சட்டம். இது நிறைய வகுப்புவாத பதட்டத்திற்கு வழிவகுக்கும், ”என்றார்.

image

அசாமின் முன்மொழியப்பட்ட புதிய சட்டத்தின்படி காளைகள், பசு, கன்றுகள், ஆண் மற்றும் பெண் எருமைகள் மற்றும் எருமை கன்றுகள் உள்ளடக்கிய அனைத்து கால்நடைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும். பசுவதை தடுப்புக்காக, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இயற்றப்பட்ட சட்டத்தில் பசுக்களுக்கு மட்டுமே தடை உள்ளது, எருமைகளுக்கு அல்ல.

அசாமில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின்படி, ஆவணங்கள் இல்லாமல் அசாம் வழியாக கால்நடைகளை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடை செய்கிறது. அசாமுடன் 263 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பங்களாதேஷுக்கு கால்நடை கடத்தலை தடுக்கவும் இச்சட்டம் வழிவகுக்கும் என அசாம் முதல்வர் சர்மா தெரிவித்தார்.

1950-இல் இயற்றப்பட்ட சட்டத்தில் "கால்நடைகள் படுகொலை, நுகர்வு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு" போதுமான சட்ட விதிகள் இல்லை என்றும், எனவே ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

image

புதிய சட்டத்தின்படி குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட எவருக்கும் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் (எட்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்) மற்றும் ரூ 3 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம் (அதிகபட்சம் ரூ.5 லட்சம்), அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் தவறு செய்யும் குற்றவாளிகளுக்கு, தண்டனை இரட்டிப்பாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3eeXi6H

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்