மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிதாக இடம்பெற்ற 43 மத்திய அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
- நாராயன் தாட்டூ ரானே: மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர். மகாராஷ்டிரா எம்.எல்.ஏவாக 6 முறை பதவி வகித்தவர். அரசியலுக்கு முன் 1971 முதல் 1984 வரை வருமான வரித்துறையில் சேவையாற்றியவர்.
- சர்பானந்த சோனாவால்: அசாமின் முதல்வராக 2016 முதல் 2021வரை பதவி வகித்தவர். அசாமில் இருந்து இரண்டு முறை எம்.பியாகவும் தேர்வானவர். மத்திய அமைச்சரவையில் விளையாட்டு துறை இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
- விரேந்திர குமார்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த எம்.பி. மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சராக இருந்தவர்.
- ஜோதிராதித்ய சிந்தியா: முந்தைய காங்கிரஸ் அரசில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். மத்திய பிரதேசத்தில் இருந்து ஐந்து முறை மாநிலங்களவைக்கு தேர்வானவர்.
- ராமச்சந்திர பிரசாத் சிங்: பீகாரில் இருந்து மாநிலங்களவைக்கு 2வது முறையாக தேர்வானவர். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி.
- அஸ்வின் வைஷ்ணவ்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. அரசு - தனியார் பங்களிப்புக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கியவர். ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானவர்.
- பசுபதி குமார் பராஸ்: பீகார் அரசில் அமைச்சராக பதவி வகித்தவர். பீகாரின் ஹாஜிபூர் தொகுதி எம்.பி.
- கிரண் ரிஜ்ஜூ: மத்திய அமைச்சரவையில் விளையாட்டுத்துறை இணை அமைச்சராக இருந்தவர்.
- ராஜ்குமார் சிங்: இந்திய முன்னாள் உள்துறை செயலாளராக இருந்தவர். 2014 முதல் பீகார் அர்ராவுக்கான இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
- ஹர்தீப் சிங் புரி: மத்திய அமைச்சரவையில் வீட்டுவசதி துறை இணையமைச்சராக இருந்தவர்.
- மன்சுக் மாண்டவ்யா: மத்திய அமைச்சரவையில் கப்பல் போக்குவரத்து இணையமைச்சராக இருந்தவர்.
- பூபேந்தர் யாதவ்: ராஜஸ்தானில் இருந்து 2வது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வானவர். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவர்.
- பர்ஷோத்தம் ரூபாலா: மத்திய அமைச்சரவையில் வேளாண் துறை இணையமைச்சராக பதவி வகித்தவர்.
- கிஷன் ரெட்டி: மத்திய அமைச்சரவையில் உள்துறை இணையமைச்சராக பதவி வகித்தவர்.
- அனுராக் சிங் தாக்கூர்: மத்திய அமைச்சரவையில் நிதித்துறை இணையமைச்சராக பதவி வகித்தவர்.
- பங்கஜ் சவுத்ரி: உத்தரப் பிரதேசத்தில் இருந்து 6வது முறையாக எம்.பியானவர். கோரக்பூரின் துணை மேயராகவும் பதவி வகித்தவர்.
- அனுப்பிரியா சிங் படேல்: மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்தவர்.
- சத்யபால் சிங் பாஹேல்: உத்தரப் பிரதேசத்தில் இருந்து 5 முறை எம்.பி.யானவர். உத்தரப் பிரதேச அரசில் அமைச்சராக பதவி வகித்தவர்.
- ராஜீவ் சந்திரசேகர்: கர்நாடகாவில் இருந்து 3 ஆவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வானவர். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
- ஷோபா கரண்லாஜே: கர்நாடகாவில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். கர்நாடக அரசில் அமைச்சராக பணியாற்றியவர்.
- பானு பிரதாப் சிங் வர்மா: உத்தரப் பிரதேசத்தில் இருந்து 5 ஆவது முறையாக எம்.பி.யானவர். வழக்கறிஞர், உத்தரப் பிரதேச எம்எல்ஏவாகவும் இருந்தவர்.
- தர்ஷனா விக்ரம் ஜார்தோஷ்: குஜராத்தில் இருந்து 3 முறை எம்.பி.யாக தேர்வானவர். குஜராத்தின் சமூகநல வாரிய உறுப்பினராகவும் உள்ளார்.
- மீனாட்சி லேகி: புதுடெல்லியில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர், சமூக சேவகர்
- அன்னபூர்ணா தேவி: ஜார்க்கண்டில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். ஜார்க்கண்ட் மற்றும் பீகாரில் 4 முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார்
- நாராயணசாமி: கர்நாடகாவில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். கர்நாடக எம்எல்ஏவாக 4 முறை பதவி வகித்துள்ளார்.
- கவுசல் கிஷோர்: உத்தரப் பிரதேசத்தில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். உத்தரப் பிரதேச அரசில் இணை அமைச்சராக பதவி வகித்தவர்.
- அஜெய் பட்: உத்தராகண்டில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். உத்தராகண்ட் அரசில் அமைச்சராக பதவி வகித்தவர்.
அரசியலுக்கு வருவதற்கு முன் வழக்கறிஞராக இருந்தார். - பி.எல். வர்மா: உத்தரப் பிரதேசத்தில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர்
- அஜெய் குமார்: உத்தரப் பிரதேசத்தில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்தவர்
- சவுஹான் தேவுசின்: குஜராத்தில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். குஜராத்தின் எம்எல்ஏவாகவும் 2 முறை பதவி வகித்துள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன் அகில இந்திய வானொலியில் பொறியாளராக பணியாற்றியவர்.
- பகவந்த் கூபா: கர்நாடகாவில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர்
- கபில் மோரேஷ்வர் பாட்டீல்: மகாராஷ்டிராவில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். கிராம பஞ்சாயத்துகளில் தலைவராக பதவி வகித்தவர்
- பிரதிமா பவுமிக்: திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர். முதல்முறையாக எம்.பி. எளிய விவசாய குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர். திரிபுரா பல்கலைக்கழகத்தில் உயிரி அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்.
- டாக்டர் சுபாஷ் சர்கார்: மேற்குவங்கத்தில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். மேற்குவங்க எய்ம்ஸ் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்.
- டாக்டர். பகவத் கிஷண்ராவ் கராத்: மகாராஷ்டிராவில் இருந்து முதல் முறையாக மாநிலங்களவை எம்.பி.யானவர். அவுரங்கபாத் மாநகராட்சியில் மேயராக பதவி வகித்துள்ளார். குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர், பொது மருத்துவம் படித்தவர்.
- டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்: மணிப்பூர் மாநிலத்தில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். அரசியலில் நுழைவதற்கு முன் புவியியல் பேராசிரியராக பணியாற்றியவர்.
- டாக்டர் பாரதி பிரவின் பவார்: மகாராஷ்டிராவில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். அரசியலில் நுழைவதற்கு முன் மருத்துவராக பணியாற்றியவர்.
- பிஷ்வேஸ்வர் துடு: ஒடிஷாவில் இருந்து முதல்முறையாக எம்.பி.யானவர். நீர்வளத்துறையில் மூத்த பொறியாளராக பணியாற்றியவர்.
- சாந்தனு தாக்கூர்: மேற்குவங்கத்தில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். மத்துவா சமூகத்தின் மூத்த தலைவர்
- டாக்டர். முன்ஜபரா மகேந்திரபாய்: குஜராத்தில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர்.அரசியலில் நுழைவதற்கு முன் இருதய சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர். குஜராத்தில் ரூ.2 டாக்டராக மக்களுக்கு சேவையாற்றியவர்.
- ஜான் பர்லா: மேற்குவங்கத்தில் இருந்து முதல்முறையாக எம்.பி.யானவர். தேயிலை தோட்ட பணியாளர்களின் உரிமைக்காக உழைத்தவர். எளிய குடும்பத்தில் பிறந்து தேயிலை தோட்ட தொழிலாளியாக வாழ்வை தொடங்கியவர்.
- எல்.முருகன்: சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றியவர். தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்தவர். தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்தவர்.
- நிஷித் பிராமணிக்: மேற்குவங்கத்தின் கூச் பீஹார் தொகுதி எம்.பி. ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்