தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக மருத்துவத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருக்கும் பிற தகவல்கள்:
“தொடர்ந்து தமிழகத்தில் 42 வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை, கடந்த 24 மணிநேரத்தில் 97 என தமிழகத்தில் பதிவாகியுள்ளது. இறந்தவர்களில், 74 பேர் அரசு மருத்துவமனையிலும், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சையிலிருந்தவர்கள். அதிகபட்சமாக, தஞ்சையில் 30 பேர் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,818 என்றாகியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், 4,952 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 36,707 என்றாகியுள்ளது.தொற்று உறுதியானவர்களில் 4,221 பேர் தமிழகத்தையும் – 9 பேர் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்தவர்களாகவும் இருக்கின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 1,60,810 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதிக தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட முதல் 5 மாவட்டங்களாக இருப்பவை: கோவை (486 பேர்), ஈரோடு (395 பேர்), சேலம் (268 பேர்), திருப்பூர் (243), தஞ்சாவூர் (239). இவற்றுக்கு அடுத்த இடத்தில், சென்னை உள்ளது. சென்னையில் 238 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.”
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்