ஜெர்மனியில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக 40-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். வெள்ளத்தின் பாதிப்பில் ஏராளமானோர் காணாமல் போயினர்.
ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் கொட்டி வரும் கன மழையால், ரைன் நகரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆர் நதியின் கரைகள் உடைந்த நிலையில், ஊருக்குள் புகுந்த வெள்ளத்தால், பல வீடுகள் சேதமடைந்தன. பலர் வீடுகளின் மேற்கூரைகளில் தஞ்சமடைந்தனர். சாலையில் மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.இதுவரை 40-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், மேலும் பலரை காணவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெல்ஜியம் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது. இருவர் உயிரிழந்த நிலையில், சாலைகள் முழுவதும் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன.
இவை தவிர, பிரான்ஸ், நெதர்லாந்து, துருக்கி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளிலும் கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை மீட்க ராணுவங்களின் ஹெலிகாப்டர்கள் வான்வெளியில் பறந்த வண்ணம் உள்ளன. மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பாதிப்புகளும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்