தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,971 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 28 பேர் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,558 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 27,282 ஆக உள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 137 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 150 ஆக உயர்ந்துள்ளது.
ஒரேநாளில் கோவை 220, சேலம் 142, ஈரோடு 128, திருப்பூர் 121, தஞ்சை 120 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இணைநோய்கள் இல்லாத 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் 50 வயதுக்குட்பட்டவர்கள் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்