20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளது. இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பிருந்து புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
சமூக வலைத்தளங்கள் இந்த விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், புதிய விதிகளுக்கு உட்பட்டு, மே மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குள் வாட்ஸ் அப் பயனர்களின் இருபது லட்சம் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது.
இதுபற்றி அந்நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் தவறுகள் நடக்கும் முன்பாக அதை தடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும், ஒருவரின் கணக்கில் மூன்று கட்டங்களாக ஆராய்ந்து, அதாவது பதிவு செய்தல், தகவலை அனுப்புதல் மற்றும் அதற்கான எதிர்மறையான கருத்துக்களை பெறும்போது கண்காணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்கும் முடக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இதேபோல் தவறான 3 கோடியே 20 லட்சம் பதிவுகளை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. அதோடு, தங்கள் குழு இதுபோன்ற செயல்களை ஆராய்ந்து மேற்கொள்ளும் முடிவுகள், தங்களது செயல்திறனை மேம்படுத்த வழிசெய்யும் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3B8uWoq20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளது. இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பிருந்து புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
சமூக வலைத்தளங்கள் இந்த விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், புதிய விதிகளுக்கு உட்பட்டு, மே மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குள் வாட்ஸ் அப் பயனர்களின் இருபது லட்சம் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது.
இதுபற்றி அந்நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் தவறுகள் நடக்கும் முன்பாக அதை தடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும், ஒருவரின் கணக்கில் மூன்று கட்டங்களாக ஆராய்ந்து, அதாவது பதிவு செய்தல், தகவலை அனுப்புதல் மற்றும் அதற்கான எதிர்மறையான கருத்துக்களை பெறும்போது கண்காணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்கும் முடக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இதேபோல் தவறான 3 கோடியே 20 லட்சம் பதிவுகளை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. அதோடு, தங்கள் குழு இதுபோன்ற செயல்களை ஆராய்ந்து மேற்கொள்ளும் முடிவுகள், தங்களது செயல்திறனை மேம்படுத்த வழிசெய்யும் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்