அசாமில் ரூ.163 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை அசாம் முதல்வர் பொதுவெளியில் தீயிட்டு எரித்தார்.
அசாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அவர் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.163 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை முதல்வரே தீயிட்டு அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 2.89 கிலோ ஹெராயின், 102.91 கிலோ கஞ்சா மற்றும் 2,03,384 போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை பொதுவெளியில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தீயிட்டு எரித்தார்.
இந்த நிகழ்வு மூலம் போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட விஷயங்களில் மாநில போலீசார் பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கையை கடைப்பிடிக்கிறது என்ற திடம் நிறைந்த செய்தியை தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்