முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக கொடுக்கப்பட்டது என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
சேலம் ஆவின் பால் பண்ணையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். பால் பண்ணை வளாகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி பிரிவு, கிடங்குகள் ஆகியவற்றை நேரில் சென்று சென்று பார்வையிட்டார். முன்னதாக, சேலம் மாநகர பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆவின் விற்பனை நிலையங்களை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர் அவர் கடந்த ஆட்சியின் போது ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக பட்டியலிட்டார்.
குறிப்பாக 234 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதுகுறித்து விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், 636 முதுநிலை மற்றும் இளநிலை ஆலை பணியாளர்களை நியமிக்க முறைகேடாக பணம் பெற்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அந்தப் பணியிடங்களுக்கு புதிதாக பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் விற்பனை1.50 லட்சம் அதிகரித்துள்ளதாகவும், சென்னையில் 22 நிலையங்கள் உள்பட விலைகுறைப்புக்கு பின்பும் பழைய விலைக்கே பால் விற்பனை செய்த நிலையங்களுக்கு சீல் வைக்கப்ப்டுள்ளது. தமிழகத்தில் 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று கூறினார் அமைச்சர் நாசர்.
அத்துடன், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார் நாசர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3dCUYGkமுன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக கொடுக்கப்பட்டது என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
சேலம் ஆவின் பால் பண்ணையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். பால் பண்ணை வளாகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி பிரிவு, கிடங்குகள் ஆகியவற்றை நேரில் சென்று சென்று பார்வையிட்டார். முன்னதாக, சேலம் மாநகர பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆவின் விற்பனை நிலையங்களை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர் அவர் கடந்த ஆட்சியின் போது ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக பட்டியலிட்டார்.
குறிப்பாக 234 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதுகுறித்து விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், 636 முதுநிலை மற்றும் இளநிலை ஆலை பணியாளர்களை நியமிக்க முறைகேடாக பணம் பெற்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அந்தப் பணியிடங்களுக்கு புதிதாக பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் விற்பனை1.50 லட்சம் அதிகரித்துள்ளதாகவும், சென்னையில் 22 நிலையங்கள் உள்பட விலைகுறைப்புக்கு பின்பும் பழைய விலைக்கே பால் விற்பனை செய்த நிலையங்களுக்கு சீல் வைக்கப்ப்டுள்ளது. தமிழகத்தில் 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று கூறினார் அமைச்சர் நாசர்.
அத்துடன், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார் நாசர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்