சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு நூறு ரூபாயை நெருங்கியது. இன்று 31 காசுகள் உயர்ந்து 99.80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கூடுதல் தடுப்பூசிகள் வழங்குக - முதல்வர் கோரிக்கை: தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அரசு மருத்துவமனைகளுக்கான உள் ஒதுக்கீட்டை 90% ஆக உயர்த்தவும் அதில் வலியுறுத்தி இருக்கிறார்.
ஜூலையில் 71 லட்சம் தடுப்பூசி தமிழகம் வரும்: ஜூலையில் 71 லட்சம் தடுப்பூசி டோஸ்களை தமிழகத்துக்கு தருவதாக மத்திய அரசு கூறியுள்ளது என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரூ.6.29 லட்சம் கோடியில் சலுகைகள்: தொழிற்துறை வளர்ச்சிக்கு 6 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஊக்கத் திட்டங்களை அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிற்துறையினருக்கு 100 கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ரூ.50 லட்சம் பணம் பறிப்பு: கடலூர் மாவட்டத்தில் முந்திரி வியாபாரியை மிரட்டி, 50 லட்சம் ரூபாய் பணம் பறிக்கப்பட்டது. வட்டி கொடுக்கல் - வாங்கலில் ஏற்பட்ட தகராறில் சக வணிகர் இந்த விபரீதச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
முதியவர்களை ஏமாற்றி ரூ.9 லட்சம் திருட்டு: புதுச்சேரியில் முதியவர்களை ஏமாற்றி 9 லட்சம் ரூபாய் திருடப்பட்டது. வங்கிக் கணக்கு விவரங்களை தொலைபேசி மூலம் பெற்று இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது.
குழந்தை விற்பனை - 9 பேர் கைது: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் குழந்தையை விற்றது தொடர்பான வழக்கில் பெற்றோர் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர்.
தமிழகத்தில் மேலும் 4,804 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் மட்டுமே தொற்று 500க்கு மேல் நீடித்துவருகிறது.
ஜூலை 31-க்கு பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகுதான் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என முதலமைச்சருடனான ஆலோசனைக்குப் பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
3 ஆவது கொள்ளையன் கைது: எஸ்பிஐ ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது நபர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
நீட் தாக்கம் -ஆய்வு தள்ளிப்போக வாய்ப்பு: நீட் தேர்வு தாக்கம் குறித்த ஆய்வை ஒரு மாதத்துக்குள் முடிக்க முயற்சிப்பதாக ஏ.கே.ராஜன் குழு தெரிவித்திருக்கிறது. ஆய்வு முடியாவிட்டால் அறிக்கை தாக்கல் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் கூறியிருக்கிறது.
டிசம்பரில் விண்ணில் பாய்கிறதா ககன்யான்?: ஆளில்லா ககன்யான் விண்கலம் டிசம்பரில் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
லண்டன் ரயில்நிலையத்தில் தீவிபத்து: லண்டன் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் பதற்றம் நிலவியது. 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.அ
காலிறுதியில் ஸ்பெயின், சுவிட்சர்லாந்து: யூரோ கோப்பை கால்பந்தில் கூடுதல் நேரத்தில் குரேயேஷியாவை வென்றது ஸ்பெயின். பெனால்டி சூட் அவுட் வரை நீடித்த ஆட்டத்தில் ஃபிரான்ஸை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து.
அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்