புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை இயக்கத்திற்கு, தமிழகத்தில் இருந்து மட்டுன்றி வெளிநாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.
கொரோனா பேரிடர் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் புதிய தலைமுறை சார்பில் துளிர்க்கும் நம்பிக்கை என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. தொடங்கிய நாள் முதல் தமிழகம் முழுவதும் இருந்து தன்னார்வலர்களும், பொதுமக்களும் ஏராளமான நிதி உதவியும், பொருளுதவியும் வழங்கி வருகின்றனர். அதன்தொடர்ச்சியாக வளைகுடா நாடான குவைத்தில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த சதீஷ் ரூ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளார். கோவையைச் சேர்ந்த சசி குடும்பத்தினரும் 10 ஆயிரம் வழங்கி புதிய தலைமுறையின் முயற்சியை ஊக்கப்படுத்தியுள்ளனர்.
புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்திருக்கும் ஒரு உதவிக்கான அழைப்பு இது. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால், 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3gaZkpW

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்