வேதாரண்யம் பகுதியில் கொரோனா காலத்தில் உயிரிழக்கும் ஆதரவற்றவர்களின் சடலத்திற்கு இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்யும் ஈகா அறக்கட்டளையினரின் சமூக சேவை அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் செயல்பட்டு வரும் ஈகா அறக்கட்டளையினர், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கொரோனா ஊரடங்கு காலத்தில் தேடி சென்று மூன்று வேளையும் உணவு வழங்கி வருகின்றனர். அதோடு ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதி சடங்கும் செய்து வருகின்றனர்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தோப்புத்துறை ஆறுமுக சந்திப்பு பகுதியில் வயது முதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்த ஆதரவற்ற முதியவர் கிருஷ்ணன் என்பவருடைய சடலத்திற்கு யாரும் இறுதி சடங்கு செய்ய முன்வரவில்லை.
இந்த நிலையில் மோகனராஜசேகரன் தலைமையில் செயல்பட்டு வரும் ஈகா அறக்கட்டளையினர் கிருஷ்ணன் சடலத்தை எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்து வேதாரண்யம் நகராட்சி நவீன எரிவாயு தகனமேடையில் தகனம் செய்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்