யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.
லடாக் எல்லையில் BRO எனப்படும் எல்லை சாலைக் கட்டமைப்பு நிறுவனத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லையோர கட்டமைப்புப் பணிகளை ராஜ்நாத் சிங் பார்வையிடவுள்ளார். மேலும், லடாக் எல்லையில் நிலவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் அவர், ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். எல்லையில் காவலில் இருக்கும் வீரர்களுடனும் ராஜ்நாத் சிங் உரையாட இருப்பதாக கூறப்படுகிறது.
சீனாவுடன் லடாக் எல்லையில் தொடர்ந்து பிரச்னை முற்றிலும் முடிவுக்கு வராத நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் அங்கு பயணம் செய்வது முக்கியத்துவம் பெறுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்