சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடலில் கச்சா எண்ணெய் கசிந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கப்பலில் வரும் கச்சா எண்ணெய் குழாய் மூலம் துறைமுக வளாகத்தில் உள்ள சேமிப்பு கலனில் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் ரஷ்ய கப்பலில் இருந்து கச்சா எண்ணெயை கலனுக்கு மாற்றும்போது திடீரென இணைப்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடலில் கசிவு ஏற்பட்டதால், அதனை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள், பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் உடைப்பு சரிசெய்யப்பட்டது.
கடலில் கசிந்த கச்சா எண்ணெயை பேரல்கள் உதவியுடன் அகற்றினர். ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்ததால் அதனை அகற்றுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதுடன் சுற்றுச்சூழலும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3zFDCSA

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்