Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

திருச்சி: பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீது பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவிகள் பாலியல் புகார் கூறியுள்ளனர். புகார் மனுவை, கல்லூரி முதல்வருக்கும் கொடுத்துள்ளனர்.

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த் துறையில் பட்டமேற்படிப்பு படித்த சில மாணவிகள், தமிழ்த் துறை தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, 5 பக்க அளவிலான புகார் மனுவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பியுள்ளனர்.

image

அதில், வகுப்பறையில் மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது போன்ற பல்வேறு பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். உச்சகட்டமாக, சட்டையையும் பேண்ட்டையும் தளர்த்திக் கொண்டு, அவர் செய்த சேட்டைகளை பார்த்து, தலையை குனிந்து கொண்டே வகுப்பறையில் இருந்தோம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் இருந்தால், தன் அறைக்கு வரச்சொல்லி, கட்டாயப் படுத்துகிறார். அதே துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் பெண் ஒருவர், துறைத்தலைவரை பார்க்க போகும்போது, முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு தான் போக வேண்டும் என வலியுறுத்துகிறார். இதனால், கல்லூரியிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

image

புகாரின் அடிப்படையில், வக்கீல் ஜெயந்திராணி தலைமையிலான குழுவினர், தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையை, கல்லூரி முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளனர். தற்போது மாணவிகளின் புகார் குறித்து போலீஸ் தரப்பிலும் விசாரணையை துவங்கி உள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3h2oEim

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்