நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆய்வில் தமிழகத்தில் தனியார் , அரசு பள்ளிகளில் நீட் தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர்? அதில் எத்தனை பேர் வெற்றிபெற்றனர்? என்பது போன்ற 5 ஆண்டு புள்ளிவிவரங்களை சேகரித்து அறிக்கை சமர்பிக்க இந்த குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். விரிவான அறிக்கை பெறப்பட்ட பிறகு அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த விஷயத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் உரிமை தமிழக அரசுக்கு உண்டு என்று கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்