Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

புதிய வசதி: மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு உதவுவோருக்கான இ-பதிவு செய்வது எப்படி?

https://ift.tt/3i43ZeE

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் பராமரிப்பாளர்கள்/தன்னார்வலர்களுக்கு இ-பதிவு செய்துகொள்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 16ம் தேதி முதல் தமிழக அரசு சார்பில் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டது. சென்ற வருடம் கொரோனா அலையின்போது, தமிழக அரசு சார்பில் இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வெளியே செல்வதற்கான காரணம் அடங்கிய விண்ணப்பம் இணையத்தில் பதிவு செய்யும்போது, இ-பதிவு உடனடியாக கிடைக்கிறது. அதே நேரத்தில் இ-பாஸ் முறையில் பதிவு செய்து உறுதி செய்த பிறகே வெளியே செல்வதற்கு அனுமதி கிடைத்தது.

image

இதனால் வெளியே செல்வதற்கு அவசியம் இருப்பவர்கள் காரணங்களை குறிப்பிட்டு இணையம் வழியாக இ-பதிவு செய்தனர். அதில் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருபவர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் (மாவட்டத்திற்குள், மாவட்டங்களுக்கு நடுவில் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் தனிநபர்கள் மேற்கொள்ளும் பயணப் பதிவுகள்), தொழில் நிறுவனங்கள் அனுமதி என்கிற பிரிவுகள் வழியே அவசியமுள்ளவர்கள், இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தனிநபர் என்கிற பிரிவில் பயணத்திற்கான காரணமாக இறப்பு, திருமணம், முதியோர் பராமரிப்பு மற்றும் மருத்துவ அவசரம் ஆகியவை உள்ளன.

இந்த நான்கு காரணங்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்து வந்த நிலையில், தற்போது இந்த பிரிவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் பராமரிப்பாளர்கள்/தன்னார்வலர்களுக்கு இ-பதிவு செய்துகொள்வதற்கான வசதி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் பலர் வேலையின்றி தவித்து வருகின்றனர், பல ஆதரவற்றவர் உணவின்றி தவித்து வரும் நிலையில் பல தன்னார்வலர்கள்களால் நாள்தோறும் அவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

image

இந்நிலையில் தன்னார்வளர்களுக்கு இ பதிவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இனி தடையின்றி உதவிகளை வழங்க முடியும். உதவும் எண்ணம் கொண்ட பல தன்னார்வளர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- ந.பால வெற்றிவேல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்