கொரோனா இரண்டாவது அலையில், நகரங்களை விட, கிராமங்கள் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்ற தன்னார்வ அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்ட மே மாதத்துக்கான தரவுகளில், நோய் தொற்று பாதிப்பில் 53 சதவிகிதமும், உயிரிழப்பில் 52 சதவிகிதமும் கிராமங்களில் தான் பதிவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வசதிகள் நிறைந்த நகரங்களிலேயே தொற்றை சமாளிக்க முடியாமல் சுகாதாரத் துறை திணறிய நிலையில், கிராமங்களில் நிலைமை மேலும் மோசமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி கிராமப்புறங்களில் கூடுதலாக 76 சதவிகித அளவுக்கு மருத்துவர்கள் மற்றும் 35 சதவிகித அளவுக்கு ஆய்வக தொழில்நுட்ப ஊழியர்களின் தேவை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் புதிய தொற்றுகளும், உயிரிழப்புகளும் அதிகம் பதிவானது கிராமங்களில்தான் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டிருக்கிறது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம். அதாவது உலகில் கொரோனாவால் பாதிக்கப்படும் ஒவ்வொரு நான்கு பேரில், ஒருவர் இந்தியாவின் கிராமப் பகுதியை சேர்ந்தவராக இருந்திருக்கிறார் என்றும், அந்த அளவுக்கு கடந்த மே மாதம் நோய் தொற்று மிக வேகமாக பரவியது என்றும் கூறியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3cgtqFVகொரோனா இரண்டாவது அலையில், நகரங்களை விட, கிராமங்கள் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்ற தன்னார்வ அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்ட மே மாதத்துக்கான தரவுகளில், நோய் தொற்று பாதிப்பில் 53 சதவிகிதமும், உயிரிழப்பில் 52 சதவிகிதமும் கிராமங்களில் தான் பதிவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வசதிகள் நிறைந்த நகரங்களிலேயே தொற்றை சமாளிக்க முடியாமல் சுகாதாரத் துறை திணறிய நிலையில், கிராமங்களில் நிலைமை மேலும் மோசமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி கிராமப்புறங்களில் கூடுதலாக 76 சதவிகித அளவுக்கு மருத்துவர்கள் மற்றும் 35 சதவிகித அளவுக்கு ஆய்வக தொழில்நுட்ப ஊழியர்களின் தேவை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் புதிய தொற்றுகளும், உயிரிழப்புகளும் அதிகம் பதிவானது கிராமங்களில்தான் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டிருக்கிறது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம். அதாவது உலகில் கொரோனாவால் பாதிக்கப்படும் ஒவ்வொரு நான்கு பேரில், ஒருவர் இந்தியாவின் கிராமப் பகுதியை சேர்ந்தவராக இருந்திருக்கிறார் என்றும், அந்த அளவுக்கு கடந்த மே மாதம் நோய் தொற்று மிக வேகமாக பரவியது என்றும் கூறியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்