Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கோகோ கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் குடிக்க அறிவுறுத்திய ரொனால்டோ: வைரல் வீடியோ

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மேஜையின் மீதிருந்த கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டிலை வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

யூரோ 2020 கால்பந்து தொடரின் போர்சுக்கல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டிலை வைத்தார். அந்த வைரல் வீடியோவில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு ரொனால்டோ வந்தவுடன்  மேஜையின் மீது கோலா பாட்டில்கள் இருந்ததை பார்த்து அதிருப்தியடைந்தார். உடனே முன்னால் இருந்த 2 கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு, தண்ணீர் பாட்டிலை தூக்கி, “அகுவா என தெரிவித்ததோடு (தண்ணீருக்கான போர்ச்சுக்கீசிய வார்த்தை) மக்கள் குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சமிக்ஞை செய்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் மேலாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் கலந்து கொண்டார். இருப்பினும், மேஜையில் வைக்கப்பட்டிருந்த கோலா பாட்டில்களை அவர் அகற்றவில்லை. யூரோ 2020 போட்டிக்கான ஸ்பான்சர்களில் கோகோ கோலாவும் ஒன்றாகும். மேலும் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ரொனால்டோவுக்கு எதிராக யுஇஎஃப்ஏ இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் ஜூன் 15 ம் தேதி நடைபெறும் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஹங்கேரியை எதிர்கொள்கிறது. சர்ச்சை குறித்து பேசிய ரொனால்டோ, "நான் பல ஆண்டுகளாக மிக உயர்ந்த மட்டத்தில் விளையாடி வருகிறேன். எனவே இதனால் என்னை கட்டம் கட்ட முடியாது. நான் 18 அல்லது 19 வயதினராக இருந்தால், எனக்கு சில தூக்கமில்லாத இரவுகள் இருக்கலாம், ஆனால் எனக்கு 36 வயதாகிறது. இடமாற்றம் பெற்றாலும் சரி அல்லது அடுத்து என்ன நடந்தாலும் சரி  ”என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2SDL1ky

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்