Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

வலுவான அரசை கட்டியெழுப்ப திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம் - ராகுல் காந்தி

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் சந்தித்தனர்.
 
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர் முதல் முறையாக நேற்று டெல்லி சென்றார். தனி விமானம் மூலம் 2 நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
 
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை டெல்லியில் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக் பதிவில், ''இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நானும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திருமதி. துர்காவதி ஸ்டாலின் இருவரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தமிழக மக்களுக்கு ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டியெழுப்ப திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம்'' என்று பதிவிட்டுள்ளார்.
 
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3q7lZXF

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்