சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவைகளில் பொதுமக்கள் சில கட்டுப்பாடுகளுடன் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சென்னை புறநகர் ரயில்களில் முன்களப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, பெண்களும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெண்களுடன் இணைந்தும் 24 மணி நேரமும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண் பயணிகள் காலை 7 மணி வரையிலும், காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரையிலும், பின்னர் இரவு 7 மணிக்கு பின்னரும் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து பயணிப்போர், ரயிலுக்கு செல்வதற்காகவும், பயணம் முடித்து வீடு திரும்பவும் ஒருமுறை மட்டும் புறநகர் ரயிலில் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், முன்களப்பணியாளர்கள் மற்றும் பெண்களுக்கு சீசன் டிக்கெட் வழங்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3gS3DqA

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்