மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் அருகே தேவைக்கு ஏற்ப ரயிலை நிறுத்தி செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் அருகே மருத்துவமனை அமையவுள்ள இடத்தின் அருகே ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என காஞ்சிரக்கோடு எம்.எல்.ஏ பிரின்ஸ் ரயில்வேத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள தெற்கு ரயில்வே போக்குவரத்து மேலாளர் பரத்குமார், மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள இடமானது திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரு ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது. மேலும் இவ்விரு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தூரமானது 10 கிலோ மீட்டர் மட்டுமே என்ற நிலையில் கூடுதல் ரயில் நிலையம் வழங்குவதற்கான தேவையில்லை. இருப்பினும் ரயில்கள் நின்று செல்ல முன்மொழிவு தேவைகளின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்