துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
நடிகை அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அடையாறு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் முன் ஜாமீன் அளிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர்.
இந்நிலையில், பெங்களூருவில் தங்கி இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த இடத்தில் அவர் கைது செய்யப்பட்டார் தற்பொழுது எங்கு வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்கின்ற தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3cUsYxo

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்