Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதம் ட்விட்டரில் வெளியீடு: மேற்கு வங்க அரசு கடும் கண்டனம்

முதலமைச்சருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டதற்காக மேற்கு வங்க அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
மேற்கு வங்காளத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, பல இடங்களில் வன்முறை நடைபெற்றன. இதில் பாஜகவினர் திட்டமிட்டு தாக்குதலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார். இவ்விவகாரங்கள் தொடர்பாக மம்தா பானர்ஜிக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.
 
இந்த நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜெகதீப் தன்கர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பங்கள் தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் முதல்வர் மவுனம் காப்பதாகவும், சுதந்திரத்திற்கு பிறகான மோசமான சம்பவங்கள் இவை எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்றும் ஆளுநர் கூறியிருந்தார். இந்தக் கடிதம் ஆளுநரின் ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டு இருந்தது.
 
image
இதனால், அதிருப்தியடைந்த மேற்கு வங்காள அரசு கடுமையாக சாடியுள்ளது. மேற்கு வங்க உள்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், பொது வெளியில் ஒரு தலைபட்சமாக வெளியிடப்பட்ட கடிதம் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. அதில் உள்ள கருத்துகள் இட்டுக்கட்டப்பட்டவை. முதல்வருக்கு எழுதப்பட்ட இந்தக் கடிதம், ஊடகங்களுக்கும் கடிதம் ட்வீட் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் - ஆளுநருக்கு இடையேயான தகவல் தொடர்பின் புனிதத்தை சீர்குலைப்பதாக உள்ளது” என விமர்சிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3cKqPVa

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்