Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

துல்லியமாக கொரோனாவை உறுதிசெய்யும் மாஸ்க்! - 90 நிமிடங்களில் முடிவை அறியலாம்

https://ift.tt/3y5LRWt

கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை தெரிந்துக்கொள்ள, பிரத்யேகமாக மாஸ்க் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அணிந்துக்கொண்டால், சுவாசம் மூலமாக, 90 நிமிடங்களில் தொற்று பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை அந்த மாஸ்க் உறுதிசெய்துவிடும் என சொல்லப்பட்டுள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர். போன்ற பரிசோதனைகள் தேவைப்படாத இந்த கொரோனா பரிசோதனை முறையை, ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

High-Tech Face Masks Aim to Step Up the Fight Against Covid-19 - WSJ

இந்த கொரோனா பரிசோதனை மாஸ்க், மிகவும் மலிவான விலையிலேயே இருக்குமென விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். இந்த மாஸ்க்கில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால், அது சுவாசத்தை பரிசோதிக்கத் தொடங்கும். அந்த மாஸ்க்கை, ஸ்மார்ட்போனுடன் இணைத்துவிட்டால் மொபைலிலேயே ரிசல்ட்டை பார்த்துக்கொள்ளலாம்.

New face mask prototype can detect Covid-19 infection | MIT News | Massachusetts Institute of Technology

இதை கண்டுபிடித்த விஞ்ஞானி குழுவை சேர்ந்த பீட்டர் என்பவர் தெரிவிக்கையில், “ஆர்.டி.பி.சி.ஆர். போல அதிக துல்லியமான முடிவை இதுவும் வழங்கும். ஆன்டிஜென் பரிசோதனையை போல, குறைந்த விலையில் விரைவாக இது முடிவுகளை தரும். ஒரு சின்ன மாஸ்குக்குள், நோயறியும் ஒரு ஆய்வகத்தையே நாங்கள் சுருக்கியுள்ளோம். இதில் நாங்கள் பொறுத்தும் பயோ சென்சார், எந்தவொரு மாஸ்க்கிலும் செயல்படக்கூடியது” எனக்கூறியுள்ளர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்