கிராமங்களில் நிலவி வரும் கொரோனா பாதிப்பை குறைக்க மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே புதிய போட்டியொன்றை அறிவித்துள்ளார். அதில் வெற்றி பெறுவோருக்கு, ரூ.50 லட்சம் வரை பரிசு கிடைக்குமென அவர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டு அலைகளிலும் அதிகம் பாதிக்கப்பட்டது மகாராஷ்டிரா மாநிலம்தான். ஆனால், தற்போது பாதிப்புகளை வெகுவாக குறைத்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாநிலத்தின் கிராமப்புறங்களில் கொரோனா பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் கிராமங்களுக்கான போட்டியை மகாராஷ்டிரா அரசு இன்று அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க சில கிராமங்கள் மேற்கொண்ட முயற்சிகளை முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் பாராட்டி இருந்த நிலையில், தற்போது ''கொரோனா இல்லாத கிராமம்'' என்ற போட்டியை அறிவித்துள்ளார்.
"இந்தப் போட்டி, முதல்வர் உத்தவ் தாக்கரேவின் கொரோனா தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும்" என்று அம்மாநில ஊரக வளர்ச்சி அமைச்சர் ஹசன் முஷ்ரிப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் கூறுகையில், இந்தப் போட்டியின் கீழ் ஒவ்வொரு வருவாய் பிரிவிலும் 'கொரோனா இல்லாத 3 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசு ரூ.50 லட்சம், இரண்டாவது பரிசு ரூ.25 லட்சம் மற்றும் மூன்றாவது பரிசு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் ஆறு வருவாய் பிரிவுகள் உள்ளன. எனவே, மொத்தம் 18 பரிசுகள் வழங்கப்படும். இதற்கான மொத்த பரிசுத் தொகை 5.4 கோடி மாநில அரசு சார்பில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஹசன் தெரிவித்துளளார்.
''போட்டியில் வெற்றிபெறும் கிராமங்களுக்கு பரிசுத் தொகைக்கு சமமான கூடுதல் தொகையும் ஊக்கமாக கிடைக்கும், மேலும் அது அந்த கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும். பங்கேற்கும் கிராமங்கள் 22 அளவுகோல்களில் தீர்மானிக்கப்படும், மேலும், கிராமங்களை தீர்மானிக்க ஒரு குழு அமைக்கப்படும்" என்றும் அமைச்சர் ஹசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உத்தவ் தாக்கரே சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள காட்னே கிராமத்தில் கொரோனா பரவல் இல்லை என்பதை அறிந்து வெகுவாக பாராட்டினார். இதற்கடுத்து இந்த புதிய முன்னெடுப்பை எடுக்க, உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, மகாராஷ்டிராவில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 14,123 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த மாத நிலவரத்தோடு ஒப்பிடுகையில், மிகவும் குறைந்த எண்ணிக்கையாகவே இருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்