இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை எட்டும் நிலையில் உள்ளது. இன்று 53,256 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியே 99 லட்சத்து 35 ஆயிரத்து 221 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 88 நாட்களில் குறைவான தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1422 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 88 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது. இன்று 78 ஆயிரத்து 190 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சத்து 44 ஆயிரத்து 199 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 2 ஆயிரத்து 887 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 28 கோடியே 36 ஆயிரத்து 898 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2TNAeEL

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்