Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கொரோனா கால மகத்துவர்: தினமும் 3 வேளையும் 800 பேருக்கு உணவு வழங்கும் இளம் படை

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளோர், ஆதரவற்றோர், முன்களப்பணியாளர்கள் என நாள்தோறும் சுமார் 800 பேருக்கு 3 வேளை உணவை வழங்கி பசியை போக்கிவருகின்றனர் இளம் பட்டாளங்கள். 

மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் டுகாத்தி. பட்டதாரி இளைஞரான இவர், சுயதொழில் செய்து வருகிறார். கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர், கடந்த கொரோனா முதல் அலையின்போது, தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கொண்டு ஆதரவற்றோர், உணவில்லாமல் தவிக்கும் ஏழை எளிய மக்கள், சாலையோரம் வசிப்பவர்களுக்கு நாள்தோறும் உணவளித்து வந்தார்.

image

இந்நிலையில் கொரோனா 2ம் அலையில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து இவரது உறவு பெண் மகாலட்சுமி மற்றும் சக நண்பர்களுடன் இணைந்து உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளனர். 7 பேர் கொண்ட இந்த குழு தங்களால் இயன்ற பணத்தை கொண்டு துவக்கத்தில் 200 பேருக்கு உணவு தயாரித்து கொடுத்து வந்த நிலையில், இவர்களின் கல்லூரி நண்பர்கள், உதவும் நல் உள்ளங்களின் ஆதரவால் தற்பொழுது 800 பேருக்கு 3 வேளையும் உணவு வழங்கி வருகிறார்கள்.

உணவில்லாமல் தவிக்கும் ஏழை எளிய மக்கள், தனிமையில் வாழும் முதியோர், சாலையோரம் வசிப்பவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் மட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கும் உணவு வழங்கி வருகிறார்கள். மேலும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

image

பல குழுக்களுக்காக பிரிந்து இரு சக்கர வாகனத்தில் ஒரு நாளைக்கு சுமார் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து ஒவ்வொருவரின் இருப்பிடத்திற்கே தேடிச் சென்று உணவு வழங்கி வருவதாக கூறும் மாணவி மகாலட்சுமி, 3 வேளையும் இரு சக்கர வாகனத்தில் பயணித்து உணவு வழங்குவதால் உடல் ரீதியாக சோர்வை கொடுத்தாலும் பலரின் பசியை போக்குகிறோம் என்ற உணர்வோடு கொரோனோவால் பாதிக்கப்பட்டவர் தங்கள் உடல்நிலை சரியாகிவிட்டதாக கூறும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு நிகர் வேறு ஏதும் இல்லை என்றார்.

கொரோனா காலத்தில அரசுடன் இணைந்து தனது பங்காக சமூக பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தனது மேல் படிப்பிற்காக மடிக்கணினி வாங்க வைத்திருந்த 85 ஆயிரம் ரூபாய் பணத்தை உணவிற்காக வழங்கியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறும் இவர், இதுபோன்ற இக்கட்டான சூழலில் பலரின் பசியை போக்குவதை விட வேறு எந்த ஒரு இழப்பும் தமக்கு பெரிதாக தெரியவில்லை என்றும் கூறினார்.

செய்தியாளர் கணேஷ்குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3z3mJRC

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்