தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டு நிலவும் நிலையில், இன்று மாலை 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வரவுள்ளதாக தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''இன்று மாலை சென்னைக்கு வரும் தடுப்பூசிகள் உடனடியாக மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. 2 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தற்போது கையிருப்பில் உள்ளன. தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசி வழங்க முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது.
தற்போது வரும் தடுப்பூசி ஒரு நாளுக்கே போதுமானதாக இருக்காது. அடுத்த தடுப்பூசி தொகுப்பு வரும் 30 ஆம் தேதி வரும் நிலை உள்ளது. தமிழகத்திற்கு நடப்பு மாதத்தில் அதிக அளவில் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்'' என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3qtBV6Jதமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டு நிலவும் நிலையில், இன்று மாலை 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வரவுள்ளதாக தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''இன்று மாலை சென்னைக்கு வரும் தடுப்பூசிகள் உடனடியாக மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. 2 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தற்போது கையிருப்பில் உள்ளன. தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசி வழங்க முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது.
தற்போது வரும் தடுப்பூசி ஒரு நாளுக்கே போதுமானதாக இருக்காது. அடுத்த தடுப்பூசி தொகுப்பு வரும் 30 ஆம் தேதி வரும் நிலை உள்ளது. தமிழகத்திற்கு நடப்பு மாதத்தில் அதிக அளவில் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்'' என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்