Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கொரோனா 2-ஆம் அலை பரவியதற்கு தேர்தல் காரணமாக அமைந்துவிட்டது - உயர்நீதிமன்றம்

கொரோனா 2-ஆம் அலை பரவியதற்கு தேர்தல் காரணமாக அமைந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் இந்த கருத்தினை தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'உள்ளாட்சிப் பதவிகள் கடந்த 2016 அக்டோபர் முதல் காலியாக உள்ளன. ஆனால், தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த விரும்பவில்லை. தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்றங்களுக்கு தவறான தகவல்களை வழங்கி வருகிறது.

image

தேர்தலை நடத்துவதற்கான நோக்கமே இல்லை. தொடர்ந்து தேர்தலை தள்ளிப்போடுவதே நோக்கமாகவே தெரிகிறது. நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் ஊரக பஞ்சாயத்து உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை மாநகராட்சி, நகராட்சிகளே, பொது சுகாதாரம், தண்ணீர், சாலை, கட்டிட பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். ஆகவே, மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்' என கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கான தேர்தல் 21 முறை தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்தல்களை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் தமிழகத்தில் கொரோனா 2-ஆம் அலை உருவாவதற்கு காரணமாக தேர்தல் அமைந்துள்ளது.

இந்த நிலையில் மீண்டும் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு தேர்தல் பிரச்சாரங்களில் கட்சியினர், பொதுமக்கள் ஈடுபட்டால் கொரோனா பரவ வாய்ப்பாக அமைந்துவிடும். மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது அதன் தீர்ப்பு வெளிவந்த பின்னர் இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்து வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/35Ionuu

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்